
ஆவடி மாநகராட்சியில் நரிக்குறவ இன மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், ஜெயா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர்கள் 26வது வார்டுக்கு உட்பட்ட சோழம்பேடு தனியார் நடுநிலைப் பள்ளியில் வாக்கு செலுத்த வந்தனர். 268 பேர் வாக்குரிமை பெற்ற நிலையில் ஜனநாயக கடமையாற்ற குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு செலுத்தினர். இதில் 15 பேர் முதன்முறையாக வாக்கு உரிமை பெற்று வாக்களிக்க வந்தனர்.
இதுகுறித்து நரிக்குறவ இளைஞர் ஒருவர், ‘’பெற்றோருடன் வாக்குப் போட வந்துள்ளேன். முதன்முறையாக வாக்கு போட்டுள்ளேன். மகிழ்ச்சியாக இருந்தது’’ எனக் கூறினார்.