மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் அமித்ஷா?

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் அமித்ஷா?

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் அமித்ஷா?
Published on

பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பிரதமராக நநேந்திர மோடி இன்று மீண்டும் பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பல வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், விளையாட்டு பிரபலங்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே,  மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கலாம் என்ற உத்தேச பட்டியலை பலரும் வெளியிட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் அமித்ஷா இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிது வாஹனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அவர், “அமித்ஷாவை சந்தித்தேன். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே நிதியமைச்சர் பதவி வகித்த அருண்ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறிவிட்டார். அதனால், நிதி அமைச்சர் அல்லது பாதுகாப்புத்துறை அவருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, சதானந்தா கவுடா, அர்ஜுன் மேஹ்வால், அனுராக் தாகூர், கிர்ரென் ரிஜிஜு, ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ராம்தாஸ் அதவாலே, ஜிதேந்தர் சிங், சுரேஷ் அங்காடி, பாபுல் சுப்ரியோ, கைலாஷ் சவுத்ரி, பிரஹ்லத் ஜோஷி மற்றும் கிஷன் ரெட்டி உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக இடம்பெறுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி தொகுதி எம்.பியுமான ரவிந்திரநாத் குமாருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com