டிரெண்டிங்
மோடி படத்தை வெளியிட்டால் பரிசு: நடிகை ரம்யா கிண்டல்
மோடி படத்தை வெளியிட்டால் பரிசு: நடிகை ரம்யா கிண்டல்
வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிடுவது போலப் படத்தை வெளியிட்டால் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு என காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவியும் நடிகையுமான ரம்யா கிண்டலடித்துள்ளார்.
குஜராத், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று மழையால் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுவது போல உள்ள படம் இருந்தால், அதனை சமூக வலைதளங்களில் வெளியிடலாம் என்று அவர் கூறியுள்ளார். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிடச் செல்லவில்லை என அவர் மீது விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில் அவர் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்றது போலப் படங்களை வெளியிட்டால் பரிசு என அறிவித்துள்ளார் ரம்யா.