\
மோடி என்னைவிட சிறந்த நடிகர்: பிரகாஷ் ராஜ் தாக்கு

மோடி என்னைவிட சிறந்த நடிகர்: பிரகாஷ் ராஜ் தாக்கு

மோடி என்னைவிட சிறந்த நடிகர்: பிரகாஷ் ராஜ் தாக்கு
Published on: 

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருப்பது வேதனையளிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கவுரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மவுனமாக இருப்பதன் மூலம், தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 
இதுபோன்ற கொடூர சம்பவங்களில் மோடி மவுனமாக இருந்தால், தன்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப அளிக்கவும் தயங்க மாட்டேன் எனவும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com