ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி
Published on

மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரைப்படத்தின் குறிப்பிட்ட காட்சிகளை இணையத்தில் பார்த்தேன் என புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியின்போது, பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் பாஜகவினர் என தெரிவித்துள்ளார். அத்துடன் பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பது போல் பாரதிய ஜனதாவின் போக்கு உள்ளதாகவும், மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவும் கூறினார். மேலும் இணையத்தில் படம் பார்த்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com