தமிழகத்தில் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி: நாராணயசாமி

தமிழகத்தில் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி: நாராணயசாமி
தமிழகத்தில் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி: நாராணயசாமி

 
தமிழகத்தில் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடந்துவருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். 

ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்துவரும் கருணாநிதியின் வைரவிழாவில் பேசிய நாராயணசாமி, கருணாநிதியின் சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று பயிலப்பட வேண்டியவை. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த கௌரவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கருணாநிதியின் அடியொற்றி, அவரது வழியில் பயணிக்க விரும்புவதாகக் கூறினார். 
தமிழகத்தில் பாஜகவின் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தமிழக அரசு பாஜகவின் பொம்மை ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கூறினார். மக்கள் எதை உண்ண வேண்டும், உண்ணக் கூடாது என்பதை முடிவுசெய்யும் சர்வாதிகார ஆட்சியை மத்திய பாஜக அரசு நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறிய நாராயணசாமி, மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்றும் குறிப்பிட்டார். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி உருவாகும் என்றும் நாராயணசாமி கூறினார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com