பாஜகவை சாடும் நமது எம்ஜிஆர்

பாஜகவை சாடும் நமது எம்ஜிஆர்

பாஜகவை சாடும் நமது எம்ஜிஆர்
Published on

அதிமுக மூன்று அணியாக பிரிந்து போனதற்கு பாஜகவே காரணம் என அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ந‌மது எம்ஜிஆரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இரண்டாக பிரிந்த அணிகளை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்த நிலையில் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நிய‌மனம் செய்யப்பட்டது செல்லாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது. அதே சமயம்‌ டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு, ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் இணைவதற்கான மறைமுக காய் நகர்த்தல்களையும் எடப்பாடி பழனிசாமி அணியினர் மேற்கொண்டு வருவதாக பேசப்படுகிறது. டெல்லியில் இரு அணியினரும் முகாமிட்ட நிலையில், இந்த மோதல்களுக்கும், அதிமுக மூன்றாக பிரிந்ததற்கும் பாஜகவே காரணம் என நமது எம்ஜிஆர் நாளேடு நையாண்டி கவிதை வெளியிட்டுள்ளது. மோடியா? இந்த லேடியா? என சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்தது பாரதிய ஜனதா தான் என்ற ரீதியில், காவி அடி, கழகத்தை அழி என்ற தலைப்பில் அந்த கவிதை எழுதப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com