\
நாமக்கல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு - தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

நாமக்கல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு - தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

நாமக்கல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு - தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு
Published on

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் சின்னப்பநாயக்கன் பாளையம் நடுநிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 7மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சில இடங்களில் வாக்குபதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குபதிவு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் 33ஆம் வார்டுக்கான வாக்குபதிவு காலை 7மணிக்கு தொடங்கிய நிலையில், சின்னப்பநாயக்கன் பாளையம் 6வது வார்டு வாக்குபதிவு மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு காலதாமதமாக தொடங்கியது.

இதேபோல் 5வது வார்டு பெண் வாக்காளர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 30 நிமிடங்கள் வாக்கு செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்...

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com