\
முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தாமதம் செய்வது ஏன்?: நமது எம்ஜிஆர்

முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தாமதம் செய்வது ஏன்?: நமது எம்ஜிஆர்

முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தாமதம் செய்வது ஏன்?: நமது எம்ஜிஆர்
Published on

முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநர் தாமதம் செய்வது ஏன் என அதிமுக அம்மா அணி அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் வினவியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரியபோது ஆளுநர் தாமதப்படுத்தியதற்கு வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளதை சிலர் காரணம் காட்டினார்கள் என அந்நாளிதழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியிடம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதற்கு ஏற்படும் தாமதத்திற்கு அந்த சிலர் எந்த வழக்கை காரணம் காட்டப்போகிறார்கள் என்றும் அந்நாளிதழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க காலம் தாழ்த்துவதற்கு உதாரணமாக எந்த வழக்கும் இருப்பதாக தெரியவில்லை என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. ஒருவேளை காரணம் கற்பிப்பவர்களுக்கு அவ்வழக்கு பற்றி தெரியுமா என்றும் நமது எம்ஜிஆர் நாளிதழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com