\
ஜெயலலிதா பிறந்த நாளில் வெளியாகும் ‘நமது அம்மா’ நாளிதழ்!

ஜெயலலிதா பிறந்த நாளில் வெளியாகும் ‘நமது அம்மா’ நாளிதழ்!

ஜெயலலிதா பிறந்த நாளில் வெளியாகும் ‘நமது அம்மா’ நாளிதழ்!
Published on: 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அன்று ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியாகவுள்ளது.

கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுகவுக்கு பிரத்யேகமாக தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறியிருந்த அவர், அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள நாளிதழுக்கு ‘நமது அம்மா’ என பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அன்று ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவின் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்காக பிரத்யேகமாக இருந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில், இந்த புதிய நாளிதழ் வெளியிடப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com