டிரெண்டிங்
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கண்டன பதாகை ஏந்தி போராட்டம்: சீமான் பங்கேற்பு
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கண்டன பதாகை ஏந்தி போராட்டம்: சீமான் பங்கேற்பு
புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுமைக்கும் நாம்தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கும் கண்டன பதாகை ஏந்தும் போராட்டத்தை நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் தங்களது வீடுகளின் முன்பாக நின்று புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி பாதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சமூக வலைத்தளங்களிலும் பதாகைகள் ஏந்தியபடி உள்ள புகைப்படங்களை பதிவிட்டும் வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். ட்விட்டரில் #TNRejectsNEP என்ற ஹேஸ்டேக் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.