\
நடிகர்களை மிரட்டும் பணியில் பாஜக இறங்கியுள்ளது: நக்மா

நடிகர்களை மிரட்டும் பணியில் பாஜக இறங்கியுள்ளது: நக்மா

நடிகர்களை மிரட்டும் பணியில் பாஜக இறங்கியுள்ளது: நக்மா
Published on

நடிகர்களை மிரட்டும் பணியில் பாஜக இறங்கியுள்ளதாக நடிகையும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்ததற்கு பிறகு காங் கட்சியை சார்ந்த பலரும் மெர்சலை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்தை ரீ டிவிட் செய்துள்ள நடிகை நக்மா, “தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாஜக அரசு பொதுமக்களை அவதியுற செய்தது. இப்போது நடிகர்களை மிரட்டும் பணியில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். அதை விடுத்து தமிழகத்தில் டெங்குவை தடுக்க முன்வர வேண்டும்" என தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com