\
நாகை தொகுதி எம்பி செல்வராஜுக்கு கொரோனா

நாகை தொகுதி எம்பி செல்வராஜுக்கு கொரோனா

நாகை தொகுதி எம்பி செல்வராஜுக்கு கொரோனா
Published on

திருவாரூரில் வசிக்கும் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம்.செல்வராஜ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 1,748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அம்மாவட்டத்தில் வசிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம். செல்வராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.செல்வராஜ் தற்போது முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இதயம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டார். அதற்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர் என பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக மக்களவை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com