தமாகா வேட்பாளராக தஞ்சையில் என்.ஆர்.நடராஜன் போட்டி

தமாகா வேட்பாளராக தஞ்சையில் என்.ஆர்.நடராஜன் போட்டி
தமாகா வேட்பாளராக தஞ்சையில் என்.ஆர்.நடராஜன் போட்டி

தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்

மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பிடித்தது. இக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து அதிமுக அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார். வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில் தமிழ் மாநில காங்கிரசுக்கு தஞ்சாவூர் தொகுதி என்பது மட்டும் உறுதியானது.

கூட்டணி குறித்து பேசிய  ஜி.கே.வாசன், ''தேர்தல் கூட்டணி என்பது வேறு. கட்சியின் லட்சியம் என்பது வேறு. மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நாளை வேட்புமனுதாக்கல் தொடங்கவுள்ள நிலையில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து  தமிழ் மாநில காங்கிரசும் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளது.

அதன்படி 2019 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா கட்சி வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவார் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் தனி சின்னத்தில் தமாகா போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com