மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: போலீஸ் குவிப்பு

மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: போலீஸ் குவிப்பு
மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: போலீஸ் குவிப்பு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையின் மீது ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இம்மலையில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக அம்பரப்பர் மலையைக் குடைந்து ஆய்வுமையம் அமைத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையின் மீது ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ள அம்பரப்பர் மலையில் ஏறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் விவசாயம் பொய்த்துவிடும் என்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com