டிரெண்டிங்
”எனது அரசியல் பயணம் இனி ஆன்மீக பயணம்” - டி ராஜேந்தர்
”எனது அரசியல் பயணம் இனி ஆன்மீக பயணம்” - டி ராஜேந்தர்
லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் தனது அரசியல் பயணம் இனி ஆன்மீக பயணமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து டி.ராஜேந்தர் கூறும் போது, “இனிமேல் என் அரசியல் பயணம், ஆன்மிக அரசியல் பயணமாக இருக்கும். ஓ.பி.எஸ் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், ஆனால் நான் என்னுடைய நிலைப்பாடை தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பலம் இருக்கிறது. இவைத்தவிர அவர்கள் பக்க பலத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளார்கள்.அதனையும் தாண்டி அவர்களிடம் பணபலம் உள்ளது. ஆகையால் அங்கு சென்று நான் என்ன செய்யப் போகிறேன். ” என்றார். முன்னதாக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என டி.ராஜேந்தர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.