\
“தேர்தலுக்குப் பிறகுதான் என் அரசியல் வாழ்வு தொடங்கும்” - எடப்பாடி பழனிசாமி

“தேர்தலுக்குப் பிறகுதான் என் அரசியல் வாழ்வு தொடங்கும்” - எடப்பாடி பழனிசாமி

“தேர்தலுக்குப் பிறகுதான் என் அரசியல் வாழ்வு தொடங்கும்” - எடப்பாடி பழனிசாமி
Published on: 

வரும் தேர்தலுக்குப் பிறகுதான் தனது அரசியல் வாழ்வு தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலுடன் முதலமைச்சர் பழனிசாமியின் அரசியல் வாழ்வு கிழிந்துவிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலினின் பேச்சுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்தில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தத் தேர்தலுக்கு பிறகுதான் தனது அரசியல் வாழ்வு தொடங்கும் எனத் தெரிவித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெறும் என்றும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com