\
கெஜ்ரிவால்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்: விஷால் விளக்கம்

கெஜ்ரிவால்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்: விஷால் விளக்கம்

கெஜ்ரிவால்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்: விஷால் விளக்கம்
Published on

கெஜ்ரிவால்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக காமராஜர் நினைவு இல்லத்திலும், ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திலும் அவர் மரியாதை செய்தார். அதன் பின்னர் பேசிய விஷால், “சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வாழ்க்கையை மக்கள் கேட்கவில்லை. சுதந்திரம் பெற்றது முதலே மக்கள் அடிப்படை வசதியை மட்டுமே கேட்டு வருகிறார்கள். இன்னும் ஏன் அது கிடைக்கவில்லை என்று மக்கள் சிந்திக்கிறார்கள். அதற்காகத்தான் நான் ஆர்.கே நகரில் நிற்கிறேன்” என்று கூறினார்.


இவரது அரசியல் பிரவேசத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். டெல்லி வரும்போது சந்திக்கவும் அழைப்பு கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஷால் “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரது பாதையை பின்பற்றிதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com