ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டது. இதில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
மேலும், “எழில் நகரில் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். தினகரன் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்.கே.நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன். இந்த பணிகளை நிறைவேற்ற தினகரனுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.