முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... தமிழக முதல்வர் மரியாதை

முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... தமிழக முதல்வர் மரியாதை
முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... தமிழக முதல்வர் மரியாதை

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுக, எம்.எல்.ஏக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இன்று நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58 குருபூஜை விழாவையொட்டி அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முத்துராலிங்கத் தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


இவருடன் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி.உதயக்குமார், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், ஒ.எஸ் மணியன், மற்றும் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com