''தலித்களின் பிரச்னைகள் தீர்த்துவைக்கப்படவில்லை'' : பினராயி விஜயன்
காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும் தலித்துகளின் பிரச்னைகளோ, குறைகளோ தீர்த்துவைக்கப்படவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.
தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் 2-வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, சாதிய ஒழிப்பில் கேரள முன்னோடி மாநிலமாக திகழ்வதாக கூறினார். மேலும் பெரியாரை நினைவுகூற வேண்டிய தருணத்தில் இப்போது அனைவரும் உள்ளதாக அவர் கூறினார். தலித்துகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார். இந்த மாநாட்டில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.