மிரட்டி பணியவைக்க அனைவரும் அதிமுகவினர் அல்ல:  பாஜகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

மிரட்டி பணியவைக்க அனைவரும் அதிமுகவினர் அல்ல: பாஜகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

மிரட்டி பணியவைக்க அனைவரும் அதிமுகவினர் அல்ல: பாஜகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
Published on

அரசின் கொள்கைகளை விமர்சிக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா தலைவர்கள் பேசி வருவது அரசியலமைப்பு வழங்கி உள்ள உரிமையை பறிக்கும் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் போராட்டக்காலம் முதல் திரைப்படங்களில் அரசியல் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ரீதியில் பாரதிய ஜனதா தலைவர்கள் பேசிவருவதாகவும், மிரட்டி பணிய வைக்க, அனைவரும் அதிமுகவினர் அல்ல என்றும் அவர் சாடியுள்ளார். 

பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு போல பாரதிய ஜனதா தலைவர்கள் நடந்து கொள்வதாகவும் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். மிரட்டலை, அச்சுறுத்தலை, மதவெறியை தூண்டும் போக்கை கைவிட்டு அரசியல் ரீதியாக தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் பேசுவது நல்லது என்றும் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com