\
6 பாட்டில் குளுக்கோஸ்; ஆனாலும் 24-வது நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம்

6 பாட்டில் குளுக்கோஸ்; ஆனாலும் 24-வது நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம்

6 பாட்டில் குளுக்கோஸ்; ஆனாலும் 24-வது நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம்
Published on

வேலூர் மாவட்டம் மத்திய சிறையில் முருகன் 24-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் இலங்கையில் உள்ள தனது தாயுடன் வீடியோ காலில் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன் வீடியோ காலில் பேச அனுமதி கோரி கடந்த 1-ம் தேதி முதல், 24-வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்.

உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் முருகனிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முருகனுக்கு இதுவரை 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்மிக ரீதியில் கடவுளை வேண்டிக்கொண்டு முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com