பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய தமிழிசை, இதுபோன்ற கொலை மிரட்டலுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், பால் கலப்படம் குறித்த சோதனை முடிவுகளை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.