மும்தாஜும், சத்ரபதி சிவாஜியும் நடனமாடுவது போல படம் எடுக்க முடியுமா? : ஹெச்.ராஜா கேள்வி

மும்தாஜும், சத்ரபதி சிவாஜியும் நடனமாடுவது போல படம் எடுக்க முடியுமா? : ஹெச்.ராஜா கேள்வி
மும்தாஜும், சத்ரபதி சிவாஜியும் நடனமாடுவது போல படம் எடுக்க முடியுமா? : ஹெச்.ராஜா கேள்வி

சரித்திர நிகழ்வுகளை கேலிக் கூத்தாகவும், கொச்சைப்படுத்தும் விதமாகவும் சித்தரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சிவகங்கையில் புதிய தலைமுறை செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், கருத்து உரிமை என்ற பெயரில் கொச்சைத் தனமாகவும், கீழ்தரமாகவும் சினிமா எடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் அத்தகைய படங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் போன்றோர் ஆதரவு தருவது கண்டிக்கதக்கது என்றும் தெரிவித்தார்.  

மும்தாஜும், சத்ரபதி சிவாஜியும் நடனமாடுவது போல சினிமாவில் படம் எடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், பல காரணங்களால் நாடு முழுவதும் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு இருப்பதாகவும் கூறினார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com