பணியில் இருந்த காவலரை சாலையிலே வைத்து சரமாரியாக தாக்கிய பெண் - நடந்தது இதுதான்!

பணியில் இருந்த காவலரை சாலையிலே வைத்து சரமாரியாக தாக்கிய பெண் - நடந்தது இதுதான்!
பணியில் இருந்த காவலரை சாலையிலே வைத்து சரமாரியாக தாக்கிய பெண் - நடந்தது இதுதான்!

மும்பையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்துக் காவலரை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

29 வயதான சங்ரிகா திவாரி என்ற பெண்மணி, தனது சக பயணியான மொஹ்சின் ஷேக் (32) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் நேற்று மும்பை கல்பாதேவி பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் ஏக்நாத் பார்தே மற்றும் அவருடன் நின்று கொண்டிருந்த சக காவலர் ஆகிய இருவரும் அவர்கள் சென்ற வாகனத்தை நிறுத்தி, தலைகவசம் அணியாதத்திற்கான காரணத்தைக் கேட்டதாக இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதில் சங்ரிகா திவாரிக்கும் காவலருக்கும் வாக்குவாதம் மூண்டது. இந்த வாக்குவாதத்தில் காவலர் பார்தே  சங்ரிகா திவாரியிடம் தவறாக நடந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சங்ரிகா திடீரென காவலரை தாக்கத் தொடங்கினார்.

காவலரின் சட்டையைப் பிடித்து இழுத்து சங்ரிகா சரமாரியாகத் தாக்கிய முழு சம்பவத்தையும் மொஹ்சின் ஷேக் தனது செல்போனில் படம் பிடித்தார். இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சக காவலர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்ட வர முயன்றார்.

ஆனால் முடியவில்லை. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் காவலர், சங்ரிகா மற்றும் மொஹ்சின் ஷேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com