சச்சின் பிறந்தநாளன்று முதல் வெற்றி பெறுமா மும்பை! லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங்!

சச்சின் பிறந்தநாளன்று முதல் வெற்றி பெறுமா மும்பை! லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங்!

சச்சின் பிறந்தநாளன்று முதல் வெற்றி பெறுமா மும்பை! லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங்!
Published on

இன்றைய ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்விகளால் துவண்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளன. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், மும்பை இண்டியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. நடப்புத் தொடரில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி, கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியிருந்தது.

7 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், பங்கேற்ற 7 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், 5 முறை சாம்பியனான மும்பை அணி தவித்து வருகிறது. சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாளான இன்று நடைபெறும் போட்டியிலாவது மும்பை வெற்றிக் கணக்கை தொடங்குமா என மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தப் போட்டியில் தோற்றால் மும்பை அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றை விட்டு வெளியேறிவிடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இக்கட்டான இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்: 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல்(கேப்டன்), மனிஷ் பாண்டே, க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான் 


மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ரித்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனட்கட், ரிலே மெரிடித், ஜஸ்பிரித் பும்ரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com