MI vs RR : டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு!

MI vs RR : டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு!

MI vs RR : டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு!
Published on

நடப்பு ஐபிஎல் சீசனின் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது. இந்த ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. 

இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் 23 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளன. இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனில் தலா 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்றுள்ளன. 

இன்று ஐபிஎல்லில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com