MI vs DC : டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு!

MI vs DC : டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு!
MI vs DC : டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு!

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனில் பதிமூன்றாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள்  விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதனால் டெல்லி அணி முதலில் பந்து வீசுகிறது. டெல்லி அணி முதல்முறையாக இந்த சீசனில் சென்னை மைதானத்தில் விளையாடுகிறது. 

இரண்டு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடி தலா இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளன. இதுவரை இரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் மும்பை 16 போட்டிகளிலும், டெல்லி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

கடந்த சீசனில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இறுதி போட்டியில் மோதி இருந்தன. அதில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com