\
முத்ரா திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் :  நிர்மலா சீதாராமன் பேச்சு

முத்ரா திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் : நிர்மலா சீதாராமன் பேச்சு

முத்ரா திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் : நிர்மலா சீதாராமன் பேச்சு
Published on

முத்ரா திட்டம் அனைத்து மக்களையும் சென்றடைய, அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். 

சிறுதொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் முத்ரா திட்டத்தின் மூலம் மீனவர்கள் உட்பட அனைத்து பகுதி மக்களும் பயன்பெற வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும் தமிழக அரசு பல திட்டங்களை வழங்கினாலும், சிறுதொழில் முனைவோருக்கு பயனளிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் வடசென்னையில் சிறுதொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார். அதே போல் தமிழக அரசு, மக்களுக்கு இலவச இன்சூரன்ஸ் அளிக்க மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதனால் மக்கள் பயனடைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com