"தோனி ரிலாக்சாகவே களமிறங்கலாம்" பிரையன் லாரா யோசனை!

"தோனி ரிலாக்சாகவே களமிறங்கலாம்" பிரையன் லாரா யோசனை!
"தோனி ரிலாக்சாகவே களமிறங்கலாம்" பிரையன் லாரா யோசனை!

சிஎஸ்கேவுக்கு நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால் தோனி ரிலாக்சாகவே களமிறங்களாம் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா யோசனை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து. இதுவரை 3 போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இந்தப் போட்டியில் ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க தோனி டைவ் அடித்து க்ரீஸை எட்டினார். அதில் அவரது பிட்னஸ் தெரிந்தது.

ஆனால் பேட்டிங்கை பொறுத்தவரை 17 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து தோனி ஆட்டமிழந்தார். அவரது பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் பிரையன் லாரா இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். அதில் "பேட்டிங் மூலம் தோனியிடம் இருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம் என தோன்றுகிறது. ஆனால் அவருக்கு கீப்பிங் என்றொரு வேலை இருக்கிறது என்பதை நாம் மறக்க கூடாது. சிஎஸ்கே பேட்டிங் ஆர்டர் நீளமானது. அதனால் தோனி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்" என்றார்.

மேலும் "தோனி முதலில் பேட்டிங் பார்முக்கு திரும்ப வேண்டும். அப்படி திரும்பினால் அது எதிரணியினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இப்போது சாம் கரணை பாருங்கள், அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். அவர் எதிர்கொள்ளும் முதல் பந்தை எந்த யோசனையுமின்றி விளாசுகிறார். சிஎஸ்கேவிடம் இப்போது நல்ல அணி இருக்கிறது. அணியை வழி நடத்தும் திறமையான தலைவர் இருக்கிறார். அதனால் கவலைப்பட தேவையில்லை" என்றார் பிரையன் லாரா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com