அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்: மகேந்திரசிங் தோனியின் புதிய சாதனை.

அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்: மகேந்திரசிங் தோனியின் புதிய சாதனை.
அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்: மகேந்திரசிங் தோனியின் புதிய சாதனை.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடும் போட்டியின் மூலமாக அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் இதுவரை 193 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இன்று தோனி விளையாடவிருக்கும் 194வது போட்டி மூலமாக சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார்.

தற்போது சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களால் இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் இந்த சீசனில் சுரேஷ் ரெய்னாவால் தனது சாதனையை தக்கவைக்க முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ்  அணியின் ரோஹித் சர்மாவும் 192 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார், அதனால் அவர் இந்த சாதனை விரைவில் முறியடிக்கவும் வாய்ப்புள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதும் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com