டிரெண்டிங்
பாஜக வேட்பாளருக்கான பட்டனில் கோளாறு - தாமதத்தால் காத்திருந்து வாக்களித்த திருச்சி சிவா!
பாஜக வேட்பாளருக்கான பட்டனில் கோளாறு - தாமதத்தால் காத்திருந்து வாக்களித்த திருச்சி சிவா!
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 54வது வார்டில் வெஸ்லி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
அந்த வாக்குச்சாவடியில் 68 பேர் வாக்களித்த நிலையில், பாஜக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட பட்டன் வேலை செய்யவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆய்வுசெய்த அதிகாரிகள் மாற்று இயந்திரம் கொண்டுவர ஏற்பாடு செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.
அந்த வாக்குச்சாவடிக்கு தமது மகளுடன் வாக்களிக்க சென்ற திமுக எம்.பி. திருச்சி சிவா, மரத்தடியில் காத்திருந்து பின்னர் வாக்களித்தார். இதேபோல் முசிறி நகராட்சியில் ஒன்றாம் வார்டில் அமைக்கப்பட்ட பெண்களுக்கான வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, வாக்குப்பதிவு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது.