\
மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்

மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்

மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்
Published on

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என்பதால், தாயே குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க பெண்மணிக்கு ஏற்கெனவே 7 மற்றும் 9 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி செக்காணூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு கணவரும் உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட சூழலில், மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என அந்த தாயார் மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இன்று ஆரம்ப சுகாதார நிலையம் வந்த மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டு கருமாத்தூரில் உள்ள காப்பகத்தில் தாயார் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

சமீபத்தில் செக்காணூரணி பகுதியில் பெண்சி சு கொலை நடைபெற்று நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com