டிரெண்டிங்
குட்டி நாய்களைப் பாதுகாக்கப் போராடிய தாய் நாய்.. உதவிய மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் குட்டிகளை பிரசவித்த தாய் நாய் தனது குட்டிகளை பாதுகாக்க மேற்கொண்ட பாச போராட்டம் அப்பகுதி மக்களை நெகிழ வைத்தது.
வந்தவாசியில் பஜார் வீதியில் ஒரு கடையின் பின்பகுதியில் ஒரு நாய் 6 குட்டிகளை ஈன்றது. வந்தவாசியில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் மழை பெய்ததால் குட்டிகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வந்துள்ளது அந்த தாய் நாய்.

இந்நிலையில் தனது குட்டிகளில் ஒன்றை வாயில் கவ்வியபடி பாதுகாப்பான இடத்தைத் தேடி பஜார் வீதியில் அங்குமிங்கும் ஓடி திரிந்தது அந்த நாய். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த நாயின் பிற குட்டிகளையும் மீட்டு ஒரு மண்டபத்தில் பாதுகாப்பாக விட்டனர்.