முக்கியமான நேரத்தில் குறுக்கிட்ட குரங்குகள்... couple photoshoot-ல் அரண்டுப்போன ஜோடி!

முக்கியமான நேரத்தில் குறுக்கிட்ட குரங்குகள்... couple photoshoot-ல் அரண்டுப்போன ஜோடி!
முக்கியமான நேரத்தில் குறுக்கிட்ட குரங்குகள்... couple photoshoot-ல் அரண்டுப்போன ஜோடி!

கல்யாணத்தில் ஃபோட்டோ எடுக்கும் காலம் மாறிப்போய், ஃபோட்டோ ஷூட் எடுப்பதற்காகவே கல்யாணம் செய்துக்கொள்ளும் காலமாகிவிட்டது எனலாம். திருமணங்களை ஒரு படமாகவே எடுக்கும் அளவுக்கு pre wedding, post wedding, wedding என வகையாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பாட்டை வைத்து முழு ஆல்பமாகவே எடுக்கும் பழக்கம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்காகவே பல நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த wedding ஃபோட்டோ ஷூட் எடுப்பதற்காகவே ஃபோட்டோகிராஃபர் குழுக்களும் தம்பதிகளும் புதுப்புது இடங்களுக்கு செல்கிறார்கள். குறிப்பாக காடு, மலை என இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாக சென்று ஃபோட்டோஷூட் எடுக்கிறார்கள். இதனால் சமயங்களில் ஆபத்தான சம்பவங்களை சந்திக்க நேரிடுகிறது.

அந்த வகையில், She Said yes என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ கிட்டத்தட்ட 25 லட்சம் வியூஸை பெற்றிருக்கிறது. காட்டுப்பகுதிக்குள் couple ஃபோட்டோஷூட் நடத்தப்பட்ட போது குரங்கு ஒன்று தனது குட்டியுடன் சென்று அந்த தம்பதியின் ஃபோட்டோஷூட்டுக்குள் குறுக்கிட்டிருக்கிறது.

இதனால் முதலில் அந்த ஜோடி அரண்டுப்போயிருக்கின்றனர். பின்னர் அந்த குரங்குகள் மணமகனின் மீது ஏறி கட்டியணைத்தபடி உட்கார்ந்தது பீதியாக இருந்தாலும், குரங்குகளை சற்று ஆசுவாசப்படுத்தி அப்படியே பிடித்திருந்ததால் நல்வாய்ப்பாக எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பின்னர் அந்த குரங்குகள் அவ்விடத்தை விட்டு சென்றிருக்கின்றன.

இதனைக் கண்ட நெட்டிசன்கள், “அந்த பெண் நல்ல அமைதியான பொறுமையானவரைதான் திருமணம் செய்திருக்கிறார்” என்றும், “உங்களுடன் இருக்கும் போது பாதுகாப்பானதாக உணர்வார் போல” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

முன்னதாக இதேப்போன்ற சம்பவம் ஒன்று கேரளாவின் கொல்லத்தில் நடந்திருக்கிறது. பன்மன சுப்பிரமணி கோயிலில் திருமணத்தை முடித்த ஜோடி ஒன்று அங்கிருந்த யானை முன்பு ஃபோட்டோஷூட் நடத்த, கொட்டகையில் இருந்த யானை புதுமண ஜோடி மீது மட்டையை வீசி எறிந்தது. இது தொடர்பான வீடியோவும் பட்டித்தொட்டியெங்கும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com