\
நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு உள்ளது: சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட்

நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு உள்ளது: சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட்

நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு உள்ளது: சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட்
Published on

ராகுல் காந்திக்கு நாட்டை வழிநடத்தும் தகுதி உள்ளது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுட் குறிப்பிட்டுள்ளார். 

மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ரவுட், சரக்கு மற்றும் சேவை வரியை திணித்த பாஜக அரசு மீது குஜராத் மக்களுக்கு அளவில்லாத கோபம் உள்ளது. இதனால், இன்று நடைபெறும் முதல்கட்ட குஜராத் சட்டசபை வாக்குப்பதிவில் பாஜக கடும் போட்டியை சந்திக்க நேரிடும். நாட்டில் மோடி அலை இல்லை என்பதை குஜராத் தேர்தல் முடிவு நிச்சயம் வெளிப்படுத்தும்.

கடந்த 2014-ம் ஆண்டு இருந்ததுபோல் விபரமறியாதவராக தற்போது ராகுல் காந்தி இல்லை. இன்று அவர் நாட்டை வழிநடத்தும் நல்ல தலைவராக முன்னேறியுள்ளார். குஜராத் மக்களுடன் அவர் பழகிய விதம், மற்றும் நாட்டு மக்களுடன் அவர் பழகும் முறை போன்ற அவரது செயல்கள், நாட்டை வழிநடத்த அவர் தயாராகி விட்டதை உணர்த்துகிறது என்று சஞ்சய் ரவுட் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com