மோடியை தேடாத தமிழ்நாடு : கூகுள் ட்ரெண்ட்

மோடியை தேடாத தமிழ்நாடு : கூகுள் ட்ரெண்ட்
மோடியை தேடாத தமிழ்நாடு : கூகுள் ட்ரெண்ட்

பிரதமர் மோடி பக்கோடா  பற்றி பேசியதும் போதும், கூகுளில் ட்ரெண்ட் அடிக்க ஆரம்பித்தது. அதோடு சேர்த்து ஒட்டுமொத்த நாட்டுக்கே பக்கோடா பீவர் ஒட்டிக் கொண்டது. ஆளும் கட்சியினர் பக்கோடவை புகழ, எதிர்கட்சிகள் பக்கோடாவை விமர்சிக்க, இப்போதும் ட்ரெண்டிங்க்கில் இருக்கிறது பக்கோடா.

இந்நிலையில், பக்கோடா குறித்து அதிகம் தேடியவர்கள் தமிழர்கள்தான் என்கிறது கூகுளின் ட்ரெண்ட்ஸ். பக்கோடா குறித்து தேடும் போது மோடி பக்கோடா, பக்கோடா செய்வது எப்படி, பக்கோடா யோஜனா, பக்கோடா பாலிடிக்ஸ் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தேடியுள்ளனர்.

இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பக்கோடாவை தேடியதில் முதல் நான்கு இடத்தை பிடித்தது தென்னிந்திய மாநிலங்கள். புதுச்சேரி, தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், கர்நாடகா என பட்டியல் நீள்கிறது.

பக்கோடாவை தேடியது இருக்கட்டும், பக்கோடா பிரபலமாக காரணமான பிரதமர் மோடியை தமிழர்கள் தேடியிருக்கிறார்களா? என்ன சொல்கிறது கூகுள் ட்ரெண்ட்ஸ்? என நாம் தேடினோம். கடந்த ஒரு மாசத்துல நரேந்திர மோடி என்றோ, மோடி என்றோ தமிழர்கள் தேடி இருக்க வாய்ப்பிருக்கே என்று நரேந்திர மோடி என கூகுள் ட்ரெண்ட்ஸில் டைப் செய்தோம். மோடி அதிகம் தேடப்பட்டிருக்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டுல இல்ல திரிபுரால. தேர்தல் வருது போல. தேடிருக்காங்க மக்கள். 

சரி தமிழ்நாட்டுல தேடியிருக்காங்களா இல்லையா என கூகுளிடமே கேட்டோம். தேடியிருக்காங்க ஆனால் லிஸ்ட்ல கடைசி பக்கத்துல இருக்குது தமிழ்நாடு என்றது ட்ரெண்ட்ஸ். அதாவது மோடி என்று கூகுளில் தேடியதில் தமிழர்களுக்கு 35 இடத்தில் 32வது இடத்தை பிடிச்சிருக்காங்க. சரி, தமிழ்நாட்டுனு ஒட்டுமொத்தமா பார்க்க வேண்டாம்.

சென்னையில இந்த இண்டெர்நெட் பயன்படுத்துறவங்க அதிகமே, அவங்க என்ன பண்ணி வச்சிருக்காங்கனு கூகுளாண்டவர் கிட்டயே மறுபடியும் கேட்டோம். தமிழ்நாடே பரவாயில்லை போல, மோடி என தேடியதில் சென்னை கடைசி இடம். சென்னையிலும் மோடியை தேடுவதில் சுணக்கம் இருக்கு போல.

சரி கடந்த ஒரு வருஷத்துலயாவது தேடி இருக்காங்களா தமிழ்நாட்டு வாசிகள்னு கூகுள்கிட்ட கேட்டா, உங்களுக்கு முன்னாடி ஒரு 33 பேரு இருக்குறாங்க, உங்களுக்கு பின்னாடி ஒருத்தர் மட்டுந்தான் இருக்குறாரு என்று 34வது இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது என்றது.

அதோடு திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்த போது பலரும் தேடியிருப்பதாகவும், அப்போது கூட மத்திய பிரதேசத்தில் இருந்தே அதிகம் பேர் தேடியிருப்பதாகவும் கூகுள் கூறுகிறது, ஆக, பக்கோடா சமயத்தில் மட்டுமல்ல, கடந்த ஆண்டு முழுக்கவே தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மோடி என்ற பெயரை பெரிய அளவில் தேடவில்லை என்கிறது கூகுள். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com