இந்தோனிஷியா தேவாலய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

இந்தோனிஷியா தேவாலய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

இந்தோனிஷியா தேவாலய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
Published on

அரசுமுறை பயணமாக இந்தோனிஷியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் தேவாலயங்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதில் முதலில் அவர் சென்றுள்ள நாடு இந்தோனேசியா. அங்கு சென்ற மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் அதிபர் ஜோகோ விடோடுவுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மோடி, இந்தோனிஷியாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் மோடி கூறுகையில், “இந்தோனிஷியாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் அப்பாடி மக்கள் கொல்லப்பட்டது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. இந்தியா இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தோனிஷியாவுடன் இந்தியா துணை நிற்கும். இதுபோன்ற துயர சம்பவங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச அளவில் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற செய்தியை உணர்த்துகிறது” என்று கூறினார். 

இந்தோனிஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் மே மாத தொடக்கத்தில் மூன்று தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் இந்தோனிஷியாவில் கடந்த 18 ஆண்டுகளில் பிறகு நடைபெற்ற மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com