\
கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி!

கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி!

கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி!
Published on

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் இன்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் கமல்ஹாசன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com