எம்எல்ஏக்கள் தொலைபேசி படி ரூ.7500: ஜியோ ஆஃபர் இல்லையா நெட்டிசன்கள் கலாய்!

எம்எல்ஏக்கள் தொலைபேசி படி ரூ.7500: ஜியோ ஆஃபர் இல்லையா நெட்டிசன்கள் கலாய்!

எம்எல்ஏக்கள் தொலைபேசி படி ரூ.7500: ஜியோ ஆஃபர் இல்லையா நெட்டிசன்கள் கலாய்!
Published on

சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதாவில் தொலைபேசிக்காக ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.  அதன்படி மசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா நிறைவேறினால் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும்.இந்த மசோதாவில் மாதம் ஒன்றுக்கு தொலைபேசி படி ரூ.5000லிருந்து ரூ.7500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராடி வரும் நிலையில் ஊதிய உயர்வு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் தற்போது தொலைபேசி கட்டணத்திற்காக 2500 உயர்த்தப்பட்டுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  

ஜியோ,ஏர்டெல் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் மாறி மாறி ஆஃபர் வழங்கும் போது இவர்களுக்கு எதுக்கு 7500 என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில்  கலாய்த்து வருகின்றனர்.அதில் சில உங்கள் பார்வைக்கு 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com