ராகுலை கேள்வி கேட்கும் விஜயதரணி

ராகுலை கேள்வி கேட்கும் விஜயதரணி

ராகுலை கேள்வி கேட்கும் விஜயதரணி
Published on

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அக்கட்சி எம்.எல்.ஏ விஜயதரணி கேள்வி எழுப்பியுள்ளார். 

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்திருந்தாலும், அக்கட்சியின் எம்எல்ஏ விஜயதரணி, படத்திறப்புக்காக சபாநாயகரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். விஜயத‌ரணியின் இந்த செயல்பாடு குறித்து கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். 

இந்நிலையில் புதியதலைமுறையின் நேர்பட பேசு விவாதத்தில் பங்கேற்று பேசிய எம்.எல்.ஏ விஜயதரணி, “ஜெயலலிதா மரணமடைந்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் அவரது உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ளது. என்னைப்பொறுத்தவரை இதுவே காலதாமதம் தான். தமிழகத்தில் பெண் தலைவர்களுக்கு இடமில்லையா?. பெண் தலைவரின் படம் ஏன் இடம்பெறக்கூடாது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ராகுல், திருநாவுக்கரசர் போன்றோர் சென்று பார்த்தனர். ஜெயலலிதா இறுதி அஞ்சலியில் ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது எல்லாம் அவர்களுக்கு ஜெயலலிதா குற்றவாளி என தெரியவில்லையா. என்னுடைய தனிப்பட்ட உரிமையை பறிக்க யாராலும் முடியாது. கட்சியின் முடிவுக்கு மதிப்பளித்து படத்திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. உருவப்பட திறப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கட்சித் தலைமை எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்”என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com