\
‘ஒகி’ புயலை ‘ஓகே’ புயல் எனக்கூறிய எம்எல்ஏ: சட்டப்பேரவையில் பலத்த சிரிப்பலை

‘ஒகி’ புயலை ‘ஓகே’ புயல் எனக்கூறிய எம்எல்ஏ: சட்டப்பேரவையில் பலத்த சிரிப்பலை

‘ஒகி’ புயலை ‘ஓகே’ புயல் எனக்கூறிய எம்எல்ஏ: சட்டப்பேரவையில் பலத்த சிரிப்பலை
Published on

‘ஒகி’ புயலை ‘ஓகே’ புயல் என சட்டப்பேரவையில் எம்எல்ஏ செம்மலை சொன்னதால், அவையில் பலத்த சிரிப்பலை எழுந்தது.

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கடந்த  8ம் தேதி தொடங்கியது. வருகிற 12ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பேரவையில் பல காரசார சம்பவங்கள் நடைபெற்ற போதிலும், இன்று எம்எல்ஏ செம்மலை பேசிய பேச்சால் சட்டப்பேரவையில் பலத்த சிரிப்பலை எழுந்தது.

ஒகி புயல் குறித்து பேசத் தொடங்கிய எம்எல்ஏ செம்மலை, ‘ஒகி’ புயலை ‘ஓகே’ புயல் என்று சொன்னார். இதேபோல, எம்எல்ஏ பிரின்ஸை, ஜேம்ஸ் என்றும் செம்மலை குறிப்பிட்டார். இதனால் அவையில் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் சிரித்ததால் அவையில் பலத்த சிரிப்பலை எழுந்தது. இதனையடுத்து செம்மலை பேசிய பேச்சை, சபாநாயகர் திருத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com