எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வு மசோதா: திமுக எதிர்ப்பு
சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி மசோதாவை இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “ போக்குவரத்து தொழிலாளர்கள் போராடி வரும் இந்த நேரத்தில் எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை உயர்த்தினால் மக்கள் நம்மைப்பார்த்து எள்ளி நகையாடுவார்கள். இதனை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் ஊதியத்தை உயர்த்தும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே திமுக எதிர்ப்பு தெரிவித்தது எனக் கூறீனார்.