டிரெண்டிங்
எம்.எல்.ஏ பழனியப்பன் உருவபொம்மை எரிப்பு: அதிமுகவினர் போராட்டம்
எம்.எல்.ஏ பழனியப்பன் உருவபொம்மை எரிப்பு: அதிமுகவினர் போராட்டம்
பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் பழனியப்பன் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, அவரது உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் எட்டிமரத்துபட்டியில் அதிமுகவினர் பழனியப்பனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பழனியப்பன் கட்சிக்கு துரோகம் இழைப்பதாகக் கூறி அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பழனியப்பன் தொகுதிக்குள் வர அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.
எம்.எல்.ஏ பழனியப்பன் டிடிவி தினகரனின் ஆதரவாளர். இன்று ஆளுநரை சந்தித்து எடப்பாடி ஆட்சிக்கு எதிராக கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.களில் பழனியப்பனும் ஒருவர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர், பழனியப்பனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.