\
சட்டப்பேரவைக்கு செல்லாமல் இசை நிகழ்ச்சியில் நடனமாடிய எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ

சட்டப்பேரவைக்கு செல்லாமல் இசை நிகழ்ச்சியில் நடனமாடிய எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ

சட்டப்பேரவைக்கு செல்லாமல் இசை நிகழ்ச்சியில் நடனமாடிய எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ
Published on: 

கர்நாடகாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஒருவர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

கர்நாடக மாநிலத்தின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. பெல்காம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அம்பரீஷ் நேற்று பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், பெங்களூரில் நடைப்பெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதோடு அந்த நிகழ்ச்சியில் அம்பரீஷ் பாடல் ஒன்றிற்கு நடனமும் ஆடியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பரீஷ் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நிராகரித்து சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்றதை அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது கர்நாடக இணையவாசிகளால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.      

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com