ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்டாலின் #HBDMKStalin
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி #HBDMKStalin என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
திமுக செயல்தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தார். இதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் கேக் வெட்டியும் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுகவின் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை தங்களது புரொபைல் படங்களாக மாற்றியும், ஸ்டாலின் புகைப்படத்தை பதிவேற்றியும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் #HBDMKStalin என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.