“மும்மொழிக் கொள்கையை அதிமுக அரசு ஏற்கக்கூடாது” - ஸ்டாலின் வலியுறுத்தல்

“மும்மொழிக் கொள்கையை அதிமுக அரசு ஏற்கக்கூடாது” - ஸ்டாலின் வலியுறுத்தல்
“மும்மொழிக் கொள்கையை அதிமுக அரசு ஏற்கக்கூடாது” - ஸ்டாலின் வலியுறுத்தல்

மும்மொழிக் கல்விக் கொள்கையை அதிமுக அரசு ஏற்கமட்டோம் என தீர்மானமாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை, காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.

இதில் பேசிய ஸ்டாலின், “கலைஞர் நினைவு நாளை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் நாளாகவும் நாம் பயன்படுத்துவோம். தலைவர் கலைஞர் நினைவு நாளில் எளிய முறையில் சிறப்பாக தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்துவோம். நினைவு நாளில் கொரோனா முன் களப்பணியாளர்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களை வழங்கிடுவோம். இந்த அரசின் ஊழல்களை மக்களிடம் கொண்டு செல்வோம்” என்றார்.

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்றும், மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார். சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, ஒருதலைப் பட்சமானதாக அமைந்துள்ள இந்த கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அதிமுக அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்று கூட்டம் சார்பில் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com