டிரெண்டிங்
பிரதமர் வரும்போது கருப்பு உடை அணியுங்கள்: ஸ்டாலின் வலியுறுத்தல்
பிரதமர் வரும்போது கருப்பு உடை அணியுங்கள்: ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்திற்கு பிரதமர் வரும்போது மக்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைமையில் காவிரி உரிமை மீட்புக்கான 2-ம் நாள் பயணம் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பயணத்தின் போது சில்லத்தூரில் பொதுமக்களை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எள்ளளவும் முயற்சிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
காவிரிப் பிரச்னைக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயார் என்று குறிப்பிட்ட அவர், ஏப்ரல் 12-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார். அப்போது அனைவரும் கருப்பு உடை அணிவதோடு, வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.