திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்துக் கைது செய்தது ஏன் என பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
புதுக்கோட்டையில் கடந்த 9-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக எம்எல்ஏ-க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகிய 3 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பின் பேரில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவர்களை நடுவழியிலேயே போலீசார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் இதே விவகாரத்தை இன்று பேரவையில் எழுப்பிய மு.க.ஸ்டாலின், விழாவில் பங்கேற்க திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டு அவர்களை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.